பிரபல கன்னட நடிகை தற்கொலை

7 months ago 22

ஐதராபாத்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை ஷோபிதா (30). இவர் கன்னடத்தில் எரடொந்த்லா மூரு, ஏ.டி.எம்., ஜாக்பாட் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், 'மீனாட்சி மதுவே, கோகிலே' போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த 'பிரம்ம கன்டு' தொடர், அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷோபிதா, ஐதராபாத்தில் குடியேறினார்.

இந்நிலையில், ஷோபிதா நேற்று அவரது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியாதநிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷோபிதா இறந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Read Entire Article