பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் முதல் பாடல் புரோமோ அப்டேட்

4 months ago 11

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கே. எஸ். ரவிகுமார், ஜார்ஜ் மரியன், இந்துமதி, விஜே சித்து ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் பாடல்கள் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையில் அனிருத் முதல் பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

Get ready for the First Single #RiseOfDragon Rockstar @anirudhofficial Vocal in a @leon_james Musical ❤️Lyrics by the talented #VigneshShivan @pradeeponelife in & as #DragonA @Dir_Ashwath Araajagam A @leon_james Musical #PradeepAshwathCombo#KalpathiSAghorampic.twitter.com/0kB1AojaFi

— AGS Entertainment (@Ags_production) December 31, 2024
Read Entire Article