பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

2 weeks ago 4

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் தி டிராகன்' சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2-வது பாடலான 'வழித்துணையே' என்ற பாடலின் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.

Due to recent developments, Dragon is now releasing on Feb 21st! ❤️See you at the movies @pradeeponelife in & as #DragonA @Dir_Ashwath Araajagam A @leon_james Musical #PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathipic.twitter.com/WVCZVF21D9

— AGS Entertainment (@Ags_production) January 18, 2025
Read Entire Article