
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'பிரதர்' படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின்'மக்காமிஷி' பாடல் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் படத்தின் இறுதிகட்ட இசைக் கோர்ப்புகள் நடந்து வருவதாக இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். யு சான்றிதழ் பெற்றுள்ளதால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.