
சென்னை,
தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரசாரத்திற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் சூரி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்'. ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த சூரியிடம், தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரசாரத்திற்கு செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சூரி, ``அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு நிறைய பட வேலைகள் இருக்கிறது'' என்றார்.