பிரதமர் மோடியுடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு; வக்பு சட்டத்திற்கு வரவேற்பு

1 day ago 2

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், முஸ்லிம் அமைப்புகளும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தங்களுடைய நன்றியை தெரிவிப்பதற்காக, முஸ்லிம் சமூகத்தில் ஒன்றான தாவூதி போரா சமூகத்தினர் அடங்கிய குழு ஒன்று, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்தது. அவர்கள் பிரதமருடன் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

எங்களுடைய சமூகத்தின், நிறைவேறா நிலையில் இருந்த நீண்ட கால கோரிக்கையிது என தெரிவித்த அவர்கள், வக்பு சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். பிரதமரின் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் கிடைக்க கூடிய வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வை மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

மேற்கு இந்தியாவில் காணப்படும் இந்த முஸ்லிம் சமூகத்தினரின் உறுப்பினர்கள், உலகம் முழுவதும் 40 நாடுகளில் பரவியிருக்கின்றனர்.

இவர்களின் தலைவர் முதன்முறையாக ஏமனில் இருந்து செயல்பட்டார். இதன்பின்னர் கடந்த 450 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து செயல்பட்டு வருகிறார். இந்த சமூகத்தினரின் பரம்பரையானது, எகிப்தில் முகமது நபியின் நேரடி வழித்தோன்றல்கள் எனவும் கூறப்படுகிறது.

Read Entire Article