பிரதமர் மோடியின் வருகையால் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுப்பு: குடியரசு தலைவர் தலையிடக்கோரி ஜேஎம்எம் கடிதம்

2 weeks ago 3

ராஞ்சி: பிரதமர் மோடி நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்தார். பிரதமரின் பாதுகாப்பை காரணம் காட்டி முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னரே ஹேமந்த் ஹெலிகாப்டர் புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில்,‘‘பிரதமர் பிரசாரம் செய்த சாய்பாசாவில் இருந்து முதல்வர் ஹேமந்த் பிரசாரம் செய்த குத்ரிக்கு 80கி.மீ. தொலைவாகும். ஆனால் பிரதமரின் பாதுகாப்பை காரணம் காட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் முதல்வரின் ஹெலிகாப்டர் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பழங்குடியின மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து நட்சத்திர பிரசாரகர்களுக்கு பாரபட்சமின்றி சமமான அரசியலமைப்பு மற்றும் மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

 

The post பிரதமர் மோடியின் வருகையால் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி மறுப்பு: குடியரசு தலைவர் தலையிடக்கோரி ஜேஎம்எம் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article