
வாஷிங்டன்,
இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், அடுத்தடுத்து வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான உறவு குறித்தும், வரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், "வரி தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி. என்னுடைய நல்ல நண்பரும் கூட. நாங்கள் இது தொடர்பாக பேசினோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் என்று நினைக்கிறேன். சிறந்த பிரதமரை இந்தியா பெற்றுள்ளது." என்று தெரிவித்தார்