பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தேர் நிலையை அடைந்தது

1 day ago 2

இடைப்பாடி, மே 14: சேலம் மாவட்டம், இடைப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழாவில், கடந்த 10ம்தேதி முதல் திருத்தேரோட்டம் நடந்து வருகிறது. விநாயகர், முருகர், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தேவகிரி அம்மனின் 3 தேர்கள், இடைப்பாடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி, நேற்று 4வது நாளில் கோயில் நிலையை வந்தடைந்தது. இடைப்பாடி நகரமன்ற தலைவர் பாஷா, செயல் அலுவலர் மாதேஸ்வரன், ஊர் கவுண்டர்கள், விழாக்குழுவினர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று இரவு சத்தாபரணம், வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று(14ம் தேதி) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

The post பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் தேர் நிலையை அடைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article