தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
நீங்கள் சபைகளில் முன்னோடியாக திகழ்வீர்கள். நல்ல நிர்வாகத்திறன் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக நிமித்தமாக வெளியூருக்குச் சென்று வரும் சூழ்நிலை உண்டாகும். அதனை வெற்றியுடன் முடிப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் தாங்கள் தொழிலில் உள்ள சூட்சுமங்களை உணர்வீர்கள்.
குடும்ப தலைவிகள் தங்களின் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகலாம். விட்டுக் கொடுப்பது நல்லது. திருமணமான புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கலைஞர்கள் உடலை கட்டுக்குள் வைப்பது நல்லது. உணவு விசயத்தில் கட்டுப்பாடு தேவை.
மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வியை வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைக் குறைத்துக் கொள்வதுடன், இனிப்பு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
புதன் கிழமை அன்று சாந்த நாயகி அம்மனுக்கு பச்சை நிற பட்டாடையை சாத்துவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
சதா வெளியிடங்களுக்குச் சென்று வருபவர். இயற்கை சூழலை ரசிப்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கள் சம்பள அடிப்படையில் அரசுக் கடன் பெற்று அதனை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
வியாபாரிகள், தங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு சில டெஸ்ட்களை செய்து அதன்பின்பே பொறுப்பை ஒப்படைப்பது நன்மையைத் தரும். வீடு கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
குடும்பத் தலைவிகளுக்கு வரவுக்கேற்ற செலவினை திட்டமிட்டு செய்து தங்கள் கணவரிடம் பாராட்டைப் பெறுவர்.
கலைஞர்கள் படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்குச் சென்று விடுங்கள். தேவையற்ற காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது.
மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தாங்களாகவே ஆர்வத்துடன் படிப்பர். உடல் நலத்தில் ஆங்காங்கே உடல் மறுத்துவிடுவதை உணர்வீர்கள். ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பரிகாரம்
செவ்வாய்க் கிழமை அன்று கருப்பண்ண சாமிக்கு ஜவ்வரிசி பாயாசம் வைத்து படைப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
நீங்கள் செயல்களுக்கு முக்கியத்துவம் தருபவர். வெறும் வாய் வார்த்தை உங்களுக்குப் பிடிக்காத ஒன்று.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தங்கள் குடும்ப விசயத்தை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு குறிப்பாக துணி மற்றும் நகை வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபத்தை பெறுவர்,
குடும்ப தலைவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும்.
கலைஞர்கள் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வது தங்களது எதிர்காலத்திற்கு மிகவும் நன்று.
கலைஞர்களுக்கு மற்ற மற்ற கலைகளிலும் ஆர்வம் அதிகரிக்கும். அதற்கென சிறப்பு பயிற்சிகள் பெறுவர்.
மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. பொறுப்புணர்ந்து படிப்பர். உடல் நலத்தில் மூட்டுவலி மற்றும் கண் எரிச்சல் உண்டாகும்.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று சித்தர் பீடத்திற்குச் சென்று தியானம் செய்வது பல தடைகளை போக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
கொஞ்சம் பிடிவாதம் கொண்டவர் நீங்கள். அதனை தவிர்த்தால் தங்கள் இலக்கினை எளிதில் அடையலாம்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் பணிகளை விரைவாய் முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். லாபமும் உயரும்.
குடும்பத் தலைவிகள் தங்கள் கணவருக்கு தேவையானதை அவர்களுக்கு அறியாமல் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பிரிந்திருந்த தம்பதியர்களிடையே ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரில் காண வேண்டும் என்ற ஆவல் பெருகும். ஒரு சில ஜோடிகள் மீண்டும் இணைவர்.
கலைஞர்கள் அழகுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். திறமையிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.
மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போக்கினை தவிர்த்து அரசுத் தேர்வில் கவனம் செலுத்தவும். நல்ல மதிப்பெண்களை பெற கூடா நட்புகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும்.
பரிகாரம்
திங்கட் கிழமை அன்று வாராகி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து வழிபடுவது நல்லது.