பினராயி விஜயனுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

5 days ago 5

கண்ணூர்,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வரும், இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். 

Read Entire Article