பிடிஎஸ் இசைக் குழுவினரை பார்ப்பதற்காக கடத்தல் நாடகமாடிய 3 சிறுமிகள்

6 months ago 20

மராட்டியத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் தென் கொரியாவுக்குச் சென்று பிரபலமான பிடிஎஸ் பாப் இசைக்குழுவினரை சந்திப்பதற்காக தாங்கள் கடத்தப்பட்டதாக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

மராட்டிய மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும் தென் கொரியாவுக்கு செல்ல தேவையான பணத்தை சம்பாதிக்க புனே செல்ல திட்டமிட்டனர். அதற்காக, தாராஷிவ் காவல்துறை உதவி எண்ணுக்கு அழைத்து மூன்று சிறுமிகள் பள்ளி வேனில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு செல்வதாக கூறியுள்ளனர். போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து, அந்த செல் போன் எண்னை கண்டுபிடித்தனர். அந்த எண் ஒமெர்காவிலிருந்து புனே செல்லும் அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்ணுடையது என்பதைக் கண்டறிந்தனர்.

ஒமெர்கா போலீசார், மொஹோலில் பேருந்து நிலையத்தில் கடை நடத்தும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் உதவியுடன் 3 சிறுமிகளும் மொஹோல் பேருந்தில் புனே செல்லும் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டு, உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து, போலீசார் சிறுமிகளிடம் இது குறித்து விசாரித்தனர். அதற்கு அந்த சிறுமிகள், புனேவுக்குச் சென்று அங்கு வேலை செய்து தேவையான பணத்தை சம்பாதித்து பின்னர் கொரியா சென்று பிடிஎஸ் பாப் இசைக்குழுவினரை சந்திக்கவே இவ்வாறு தாங்கள் திட்டமிட்டதாகக் கூறினர்.

Read Entire Article