சென்னை: பிச்சாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரணியாறு நீர் தேக்கத்தில் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் குறித்த ஐந்தாம் நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் தற்பொழுது நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நீர்தேக்கத்தின் முழு மட்ட நீர் அளவு (+281.00 அடி).
இன்று 13.12.2024 காலை 08.00 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட அளவு (+280.00 அடி) பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு இன்று 13.12.2024 காலை 08.00 மணிக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5600 கனஅடியக உள்ளது அணை முழு நீர்மட்ட அளவை எட்டியுள்ளதால் உபரிநீர் அளவுக்கு ஏற்றவாறு, அதே அளவு நீரானது அணையிலிருந்து வெறியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் சுருட்டப்பள்ளி அணைக்கட்டின் மேல் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து பெறப்படும் நீர் என மொத்தமாக சிற்றப்பாக்கம் கிராமத்தில் உள்ள சிற்றப்பாக்கம் அணைக்கட்டில் பெறப்படும் நீரின் அளவு 16718 கன அடியாக உள்ளது. இந்த வெள்ள நீர் மாலை 4.00 மணியளவில் பொன்னேரி பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆரணியாறு ஒட்டியுள்ள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சென்றடைகிறது. அதன் விவரம் பின்வருமாறு,
இடதுபுறம்: ஊத்துக்கோட்டை வட்டம்
1. ஊத்துக்கோட்டை
2. தாராட்சி
3. கீழ்சிட்ரபாக்கம்
4. மேல்சிட்ரபாக்கம்
5. பேரண்டூர்
6. 43 – பனப்பாக்கம்
7. பாலவாக்கம்
8. இலட்சிவாக்கம்
9. சூளைமேனி
10. காக்கவாக்கம்
11. சென்னாங்கரணை
12. ஆத்துப்பாக்கம்
13. அரியப்பாக்கம்
14. செங்காத்தா -குளம்
15. பெரியபாளையம்
16. பாலீஸ்வரம்
கும்மிப்பூண்டி வட்டம்
17. நெல்வாய்
18. மங்களம்
19. பாலவாக்கம்
20. ஆர்.என் கண்டிகை
21. ஏ.என்.குப்பம்
22. மேல்முதலம்பேடு
23. கீழ்முதலம்பேடு
24. அரியந்துறை
25. கவரைப்பேட்டை
26. பெருவாயல்
பொன்னேரி வட்டம்
27. ஏலியம்பேடு
28. பெரியகாவணம்
29. சின்னகாவணம்
30. பொன்னேரி
31. தேவனஞ்சேரி
32. இலட்சுமிபுரம்
33. லிங்கப்பையன் பேட்டை
34. கம்மவார்பாளையம்
35. பெரும்பேடு
36. வஞ்சிவாக்கம்
37. திருவெள்ளவாயல்
38. ஒன்பாக்கம்
39. பிரளயம்பாக்கம்
40. போளாச்சிஅம்மன் குளம்
41. கம்மாளமடம்
வலதுபுறம்: ஊத்துக்கோட்டை வட்டம்
1. போந்தவாக்கம்
2. அனந்தேரி
3. பேரிட்டிவாக்கம்
4. வடதில்லை
5. மாம்பாக்கம்
6. கல்பட்டு
7. மாளந்தூர்
8. தொளவேடு
9. மேல்மாளிகைப்பட்டு
10. கீழ்மாளிகைப்பட்டு
11. பெரியபாளையம்
பொன்னேரி வட்டம்
12. ராள்ளப்பாடி
13. ஆரணி
14. போந்தவாக்கம்
15. புதுவாயல்
16. துரைநல்லூர்
17. வைரவன் குப்பம்
18. வெள்ளோடை
19. பொன்னேரி
20. ஆலாடு
21. கொளத்தூர்
22. குமாரசிறுலப்பாக்கம்
23. மனோபுரம்
24. அத்திமாஞ்சேரி
25. வேலூர்
26. ரெட்டிப்பாளையம்
27. தத்தமஞ்சி
28. காட்டூர்
29. கடப்பாக்கம்
30. சிறுப்பழவேற்காடு
31. ஆண்டார்மடம்
32. தாங்கல்பெரும்புலம்
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேற்படி கிராமங்கள் பாதிப்பிற்குள்ளாகும். மேலும், உபரி நீர் வரும் வழியில் கீழ்க்கண்ட அணைக்கட்டு. செக்டேம் தரைப்பாலங்கள் அமைந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு.
* எல்லாபுரம் வட்டாரம், சுருட்டப்பள்ளி அணைக்கட்டு, சுருட்டப்பள்ளி கிராமம், ஊத்துக்கோட்டை வட்டம்
*எல்லாபுரம் வட்டாரம், சிற்றப்பாக்கம் அணைக்கட்டு, சிற்றப்பாக்கம் கிராமம், ஊத்துக்கோட்டை வட்டம்
*எல்லாபுரம் வட்டாரம், 43.பனப்பாக்கம் தடுப்பணை, பனப்பாக்கம் கிராமம், ஊத்துக்கோட்டை வட்டம்
*எல்லாபுரம் வட்டாரம், கல்பட்டு தடுப்பணை, கல்பட்டு கிராமம்,ஊத்துக்கோட்டை வட்டம்
*எல்லாபுரம் வட்டாரம், செங்காத்தகுளம் தடுப்பணை, செங்காத்தகுளம் கிராமம், ஊத்துக்கோட்டை வட்டம்.
*கும்மிடிப்பூண்டி வட்டாரம், பாலேஸ்வரம் தடுப்பணை, பாலேஸ்வரம் கிராமம், கும்மிடிப்பூண்டி வட்டம்.
*கும்மிடிப்பூண்டி வட்டாரம், ஏ.என்.குப்பம் அணைக்கட்டு, ஏ.என்.குப்பம் கிராமம், கும்மிடிப்பூண்டி வட்டம்
*மீஞ்சூர் வட்டாரம், இலட்சுமிப்புரம் அணைக்கட்டு, ஆலாடு கிராமம், பொன்னேரி வட்டம்
*மீஞ்சூர் வட்டாரம், ஏ.ரெட்டிப்பாளையம் தடுப்பணை, ஏ.ரெட்டிப்பாளையம் கிராமம், பொன்னேரி
*மீஞ்சூர் வட்டாரம், ஆண்டார்மடம் தடுப்பணை, ஆண்டார்மடம் கிராமம், பொன்னேரி
எனவே, ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி ஆரணியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு, சென்டேம், பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக பொது மக்கள் செல்லாத வண்ணம் Barricade அமைத்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post பிச்சாட்டூர் ஆரணியாறு நீர் தேக்கத்தில் வெள்ள நீர் வெளியேற்றம் குறித்த அறிக்கை: நீர்வளத்துறை வெளியீடு appeared first on Dinakaran.