
சென்னை,
கபாலி, பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து, ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரித்விகா.
லெவன் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து ரித்விகா டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 'கைத்தலம்பற்ற' என பதிவிட்டு திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ரித்விகா. கணவர் பெயர் வினோத் லட்சுமணன் என்று பதிவிட்டு அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.
திருமண வாழ்வில் இணையவுள்ள ரித்விகாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரித்விகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.