பிஒய்டி சீல்

6 hours ago 2

பிஒய்டி நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட பிஒய்டி சீல் காரை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. புதிய அம்சங்களாக இதில் உள்ள ஏசியில் பெரிய கம்ப்ரசர், லித்தியம் அயன் பாஸ்பேட் லோ வோல்டேஜ் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த பேட்டரி வழக்கமான பேட்டரிகளை விட 5 மடங்கு எடை குறைவானவை. 15 ஆண்டு வரை உழைக்கக் கூடியவை. 61.44 கிலோவாட் அவர் மற்றும் 82.56 கிலோவாட் அவர் என இரண்டு வித பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும்.

டைனமிக், பிரீமியம் மற்றும் பர்பாமென்ஸ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.41 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.53.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post பிஒய்டி சீல் appeared first on Dinakaran.

Read Entire Article