பிஇ விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்

1 week ago 3

சென்னை: நடப்பாண்டு பி.இ., படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை முதல் ஆன்லைனில் தொடங்க இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ், 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே உயர்படிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி, என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்பதை முடிவு செய்து விடுவார்கள். அதன்படி, பி.இ., படிப்புகளுக்கு நாளை (மே 7) முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதனை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார். https://www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

The post பிஇ விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article