பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

9 hours ago 2

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இதில், 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த உள்ளது.

விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படும். பூமியில் எந்தவொரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ ஏவிய 101-வது ராக்கெட் இதுவாகும்.

Read Entire Article