பால் கடம்பு

2 months ago 7

தேவையான பொருட்கள்:

பால் – ½ லிட்டர்
ஏலக்காய் – 2 அல்லது ½ டீ ஸ்பூன்
சர்க்கரை – 100 கிராம்
பால் பவுடர் – 100 கிராம்
சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகர் – 7 கிராம்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முடிந்த வரை தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் எடுத்து கொள்ளவும்.பாக்கெட் பால் என்றால் ஃபுல் கிரீம் மில்க் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது கிடைக்கவில்லை என்றால் சாதாரண பால் வாங்கி உபயோகித்து கொள்ளுங்கள்.கிடைப்பதை வைத்து முயற்சி செய்வதில் ஏதும் தவறில்லை, பாலின் தன்மையை பொறுத்து சுவையில் சிறிதாய் மாற்றம் இருக்கலாம். பாலை அடுப்பில் வைத்து முழு வேக தீயில் நன்றாக கொதிக்க விடவும். பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். பின் இரண்டு ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக பொடி செய்து பாலுடன் சேர்த்து கொள்ளவும். அதில் பால் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைய விடவும். நன்றாக கரைந்ததும் அதனுடன் சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகரை பொடியாக நறுக்கியோ அல்லது உடைத்தோ சேர்த்து கரைய விடவும். அகர் அகர் மேற்பரப்பில் கரைந்தது போல இருந்தாலும் அடிப்பகுதியில் கட்டியாக இருக்கும், நன்றாக கரைத்ததை உறுதி செய்து கொள்ளவும். பால் பொங்கி வரும் தன்மை கொண்டிருப்பதால், நன்றாக கரண்டி வைத்து கலந்து கொண்டே இருக்கவும்.பால் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஒரு தட்டு அல்லது அகலமான பாத்திரத்தில் நெய்யை தடவி கொள்ளவும். காய்ச்சி வைத்த பாலை நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும். குறைந்து 4-5 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும் விளிம்புகளில் கத்தியால் கீறி பாத்திரத்தை தலை கீழாக கவிழ்த்து தட்டினால் அப்படியே வேறு பாத்திரத்திற்கு மாறிவிடும். துண்டுகளாக நறுக்கினால் அருமையான ரோட்டுக்கடை சீம்பால் ரெடி.இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு ஆன அப்புறமும் சாப்பிடலாம்!

The post பால் கடம்பு appeared first on Dinakaran.

Read Entire Article