பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா...வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 week ago 5

மும்பை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், ஸ்ரீலீலாவின் பாலிவுட் அறிமுகம் எப்போது என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ஸ்ரீலீலாவின் பாலிவுட் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. அதன்படி, கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தை அனுராக் பாசு இயக்குகிறார். மேலும், இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

ஸ்ரீலீலா தற்போது பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்', ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜாதரா' மற்றும் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் 'பராசக்தி' அவர் தமிழில் அறிமுகமாகும் படமாகும்.

Read Entire Article