பாலிவுட் படத்தின் 2-வது பாகத்தில் நடிக்கும் மிருணாள் தாகூர்?

2 weeks ago 6

சென்னை,

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் படத்தின் 2-வது பாகத்தில் நடிக்க மிருணாள் தாகூரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு அஜய் தேவ்கன், சல்மான்கான், சஞ்சய் தத், சோனாக்சி சின்ஹா ஆகியோர் நடித்த படம் 'சன் ஆப் சர்தார்'. இது தெலுங்கில் ஹிட்டான 'மரியதா 'ராமண்ணா படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது 'சன் ஆப் சர்தார்'-ன் 2-வது பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அஜய் தேவ்கன் தவிர முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிக்காமல் புதிய நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

Read Entire Article