பாலியல் வழக்குகளில் சட்ட திருத்தம் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

3 weeks ago 7

அவனியாபுரம்: சென்னையில் இருந்து மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான வழக்குகளில் தண்டனை குறித்த சட்டத் திருத்தம் வரவேற்கத்தக்கது.  இது பெண்களுக்கு எதிரான அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர்கள் அதிமுக உரிமை மீட்புகுழுவினரான நாங்கள் தான். எனவே, எந்த ரூபத்தில் வந்தாலும், அதை தடுத்து நிறுத்தும் இயக்கமாக நாங்கள் இருப்போம். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில், ‘யார் அந்த சார்’ என்ற பிரச்னையில் நிச்சயம் தெய்வம் கேட்கும். அப்போது அந்த சார் யார் என்பது, அனைவருக்கும் தெரிய வரும். இவ்வாறு கூறினார்.

The post பாலியல் வழக்குகளில் சட்ட திருத்தம் தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article