அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் பலத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது இதுவரை 20 வழக்குகள் உள்ளதாகவும், 6 வழக்குகளில் தண்டனை பெற்று உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
குற்றமிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், அண்ணா பல்கலை கழகத்தில் நிர்வாகத்துடன் ஆலோசித்து பாதுகாப்பை பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.