சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொது வெளியில் வெளியானது ஜீரணிக்க முடியாத ஒன்று. அதை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.