போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சிதாபூர் தொகுதி எம்.பி. ராகேஷ் ரத்தோர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகேஷ் ரத்தோர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
கோட்வாலி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரில், திருமணம் செய்துகொள்வதாகவும், அரசியலில் ஈடுபடுத்துவதாகவும் கூறி ராகேஷ் ரத்தோர் கடந்த 4 ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.