பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் நண்பருடன் கைது

1 month ago 4

சென்னை: திருமங்கலம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இளம்பெண் புரோக்கர், ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் என்.வி.என் நகரில் வீடு ஒன்றில் இளம்பெண்னை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து சென்றது தெரியவந்தது.

உடனே அந்த வீட்டிற்குள் சென்று போலீசார் சோதனை நடத்திய போது, ஷெனாய் நகர் அப்பாராவ் கார்டன் 3வது தெருவை சேர்ந்த பைரோஸ் ஷர்மா (24) மற்றும் அவரது ஆண் நண்பர் தண்டையார்பேட்டை வினோபா நகர் 12வது தெருவை சேர்ந்த அயூப் (32) ஆகியோர், இளம்பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. மேலும், பைரோஸ் ஷர்மா சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழில் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும், இவர் ஜாமீனில் வெளியே வந்து, தனது ஆண் நண்பருடன் இணைந்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பைரோஸ் ஷர்மா மற்றும் ஆண் நண்பர் அயூப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம்பெண் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் நண்பருடன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article