பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது

1 month ago 5

பூந்தமல்லி: வளசரவாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அந்த வீட்டில் போலீசார் நேற்று திடீரென சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த வேலூரை சேர்ந்த செல்வி (41), என்பவரை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இளம்பெண்ணை மீட்டனர். பின்னர், செல்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் அரசு மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

The post பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article