நியூயார்க்: பாலியல் தொழிலுக்கு பெயர் போன தாய்லாந்தில் திருமணமானவர்களில் 51% பேருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், முதல் 10 நாடுகளில் இந்தியாவின் பெயர் இல்லை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் பலவற்றில் ‘ஓபன் மேரேஜ்’ எனப்படும் கலாசாரம் புதிய ட்ரெண்டாகவே மாறிவிட்டது. பெரும்பாலும் மேலை நாடுகளான அமெரிக்கா அல்லது அதனை சுற்றியிருக்கும் நாடுகளில்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது. ஆனால், அந்த நாடுகளை தாண்டி மேலும் பல நாடுகளில் கள்ளக்காதல் கலாசாரம் டாப்பில் இருக்கிறது. டெக்னாலஜி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவில் ஆன்லைன் டேட்டிங் ஆப் வழியாக பலர் கள்ளக்காதல் தொடர்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
பாலியல் தொழிலுக்கு பெயர்போன தாய்லாந்தில் மட்டும் பெண்கள், ஆண்கள் மட்டுமின்றி பிற பாலினத்தவர்களும் பாலியல் தொழில் செய்கின்றனர். இதனால், இங்கிருப்பவர்கள் மிகவும் சகஜமாகவே திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். உலகளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தாய்லாந்தில் மட்டுமே திருமணமான பலர் கள்ளக்காதல் தொடர்பில் இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். இதனை திருமண வாழ்வின் துரோகம் என்றும் அழைக்கின்றனர். ‘ஸ்டாடிஸ்டா’ நடத்திய கணக்கெடுப்பில், தாய்லாந்தில் மட்டும் திருமணமான தம்பதிகளில் 51% பேர் கள்ளக்காதல் தொடர்பில் உள்ளனர். 2வது இடத்தில் டென்மார்க் 46%, அதற்கடுத்த இடங்களில் இத்தாலி 45%, ஜெர்மனி 45%, பிரான்ஸ் 43%, நார்வே 41%, பெல்ஜியம் 40%, ஸ்பெயின் 39%, இங்கிலாந்து 36%, பின்லாந்து 36% என்ற வரிசையில் நாடுகள் செல்கின்றன. முதல் பத்து இடங்களில் இந்தியாவின் பெயர் இல்லை.
மேற்கண்ட புள்ளி விபரங்கள் யாவும், பிரபல டேட்டிங் வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் உறவில் முதலிடத்தில் உள்ள தாய்லாந்தில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதிகளவில் கள்ளத் தொடர்பு வைத்துள்ளனர். அதன்படி ஆண்களில் 54% பேரும், பெண்களில் 59% பேரும் கள்ளத் தொடர்பில் தான் வாழ்கின்றனர். எனவே தாய்லாந்தில் விபசாரம் என்பது மிகவும் தீவிரமான பிரச்னையாக கருதப்படுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு என்று தனியாக சட்டம் உள்ளதால், அதுதொடர்பான பிரச்னைகளையும் அந்நாடு சந்தித்து வருகிறது. எப்படியாகிலும் ‘ஜாலி டூராக தாய்லாந்து சென்று வரவேண்டும்’ என்ற எண்ணம் உலக சுற்றலா பிரியர்களிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் முதல் திருமண சராசரி வயது;
பெண்களின் திருமண வயது 18 என்று பல நாடுகள் நிர்ணயம் செய்திருந்தாலும், 18 முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்வதையே ெபரும்பான்மையான பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் சில நாடுகளில் பெண்கள் உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக வாழ்க்கையை ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் தென் கொரியாவில் பெண்களின் முதல் திருமண வயது 37.3 ஆக உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின் 36.4, நெதர்லாந்து 35.6, நார்வே 35.2, அர்ஜென்டினா 35.1, பிரேசில் 34.7, ஸ்வீடன் 34.5, ஜெர்மனி 34.2, அயர்லாந்து 34, பின்லாந்து 33.9, இத்தாலி 33.8, ஆஸ்திரேலியா 33.7 என்ற வயதில் திருமணம் செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
The post பாலியல் தொழிலுக்கு பெயர் போன தாய்லாந்தில் 51% பேருக்கு கள்ளத்தொடர்பு இருக்கு: முதல் 10 இடத்தில் இந்தியா இல்லை appeared first on Dinakaran.