பாலியல் தொல்லையால் மாணவன் தற்கொலை முயற்சி: ஆசிரியர் கைது

1 week ago 2

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 வயது மாணவன் ஒருவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மகன் திருமண விழா கடந்த 1ம் தேதி நடந்தது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக முந்தின நாள் (31ம் தேதி) இரவு மண்டபத்திற்கு சென்ற அந்த மாணவருக்கு, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் உசேன் என்பவர் கழிப்பறையில் வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது சக மாணவர்களுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரை சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதில், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இதுகுறித்து புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் ஆசிரியர் உசேன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலியல் தொல்லையால் மாணவன் தற்கொலை முயற்சி: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article