சென்னை: “வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணாக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாது.” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி இன்று (பிப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.