சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இளம்பெண் முதல் மூதாட்டி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக பிரேமலதா விஜயகாந்த் வேதனை தெரிவித்தார். அவை தடுக்கப்பட வேண்டும். ஏப்ரலில் நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களில் பெரிய மாற்றம் ஏற்படும். கோயம்பேடு பாலத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டவும், பாரத ரத்னா விருது வழங்கவும் ஒன்றிய அரசுக்கு பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
The post பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.