பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம்

3 months ago 24

சாத்தூர், அக்.4: சாத்தூர் அருகே விளைநிலங்கள் மத்தியில் பாலித்தீன் குப்பைகளை கொட்டுவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தூர் அருகே சின்னக்கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள தெற்கூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி, விளை நிலங்களுக்கு மத்தியில் தனிநபர்கள் வெளியூரில் இருந்து பாலித்தீன் கழிவுகளை சரக்கு வாகனங்களில் ஏற்றி வந்து கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த பாலித்தீன் கழிவுகள் காற்றில் பறந்து சென்று விளை நிலங்களில் விழுகின்றன. இதனால் மண்ணின் வளம் பாதிப்படையும். கால்நடைகள் பாலித்தீன் கழிவு பேப்பர்களை சாப்பிடுவதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலித்தீன் கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாலித்தீன் குப்பைகளால் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article