பாலஸ்தீன கொடி காட்டிய மின்துறை ஊழியர் டிஸ்மிஸ்: உபி அரசு அதிரடி நடவடிக்கை

4 weeks ago 8

சஹரன்பூர்: உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீன கொடியை காட்டிய மின்துறை ஒப்பந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி, உபியின் சஹரன்பூர் மாவட்டம் ஈத்கா பகுதியில் உள்ள அம்பாலா சாலையில் தொழுகை செய்த 8 பேர் பாலஸ்தீன கொடியை காட்டி கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து இந்த வீடியோவில் இருந்த மின்துறை ஒப்பந்த ஊழியர் சாதிக் கான் என்பவரை பணிநீக்கம் செய்ய மாநில மின்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிற நாட்டு கொடியை காட்டுவது தேச விரோத செயல் என்பதால் அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மின்துறை நிர்வாக பொறியாளர் சஞ்சீவ் குமார் கூறி உள்ளார். மேலும், வீடியோவில் உள்ள மற்ற நபர்கள் யார் என விசாரித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி வியோம் பந்தல் கூறி உள்ளார்.

The post பாலஸ்தீன கொடி காட்டிய மின்துறை ஊழியர் டிஸ்மிஸ்: உபி அரசு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article