சென்னை: ஐயூஎம்எல் தலைவராக 3ஆவது முறையாக மீண்டும் தேர்வாகியுள்ள காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!. பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயா அவர்களின் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் IUML-இன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post ஐயூஎம்எல் தலைவராக 3ஆவது முறையாக மீண்டும் தேர்வாகியுள்ள காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.