பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார் - ரவி சாஸ்திரி

4 days ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார் என இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

பார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்வுவார். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் . இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தை எப்படி விளையாடினார் என்பதை பார்த்திருப்பீர்கள். பெர்த் ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது ஆட்டத்தை ஜெய்ஸ்வால் மாற்றிக் கொண்டால், அந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடுவதை விரும்புவார். பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் ஜெய்ஸ்வால் ஆர்வமாக இருக்கிறார். அவர் ஸ்லிப் பகுதியில் அருமையாக பீல்டிங் செய்கிறார் என்றார்.

Read Entire Article