பார்டர்-கவாஸ்கர் டிராபி; ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்வது எப்போது..? - வெளியான தகவல்

7 months ago 24

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதில்லை என்ற சிறப்புடன் களம் இறங்குகிறது.

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு கடந்த 15-ந் தேதி ஆண் குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு சென்ற இந்திய அணியினருடன் செல்லவில்லை. இதன் காரணமாக இன்று தொடங்கும் முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் ஆகியோரில் ஒருவரை தொடக்க வீரராக களம் இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரோகித் சர்மா வரும் 24-ந் தேதி இந்திய அணியினருடன் இணைய இருப்பதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் 2வது போட்டியில் இருந்து களம் இறங்குவார் என தெரிகிறது.

Read Entire Article