சேலம், பிப்.10: சேலம் மரபு மீட்புக்குழு சார்பில், பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி பிரியா ராஜ்நாராயணன், தகடூர் களஞ்சியம் இயற்கை உழவர்கள் சங்க தலைவர் அரிமா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதில் 150க்கும் மேற்பட்ட மரபு காய்கறி விதைகள், பாரம்பரிய நெல் வகைகள், மூலிகைகள், நாட்டு மரக்கன்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், தேங்காய் ஓடு, பனை ஓலையில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள், வேளாண்மை மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், சிறுதானிய உணவுகள், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வாங்கிச்சென்றனர். முன்னதாக இயற்றை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், அரவிந்தன், விமல்ராஜ், மல்லிகேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
The post பாரம்பரிய நெல் கண்காட்சி appeared first on Dinakaran.