பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை :ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

6 days ago 7

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஐடிஐ/ டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி: 8 இடங்கள்.
வயது: 28க்குள். சம்பளம்: ரூ.24,500-90,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னீசியன்: 21 இடங்கள். சம்பளம்: ரூ.21,500-82,000.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பாடத்தில் ஐடிஐ படித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
3. ஜூனியர் அசிஸ்டென்ட்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.21,500-82,000. வயது: 28க்குள். தகுதி: பி.காம்/பிபிஎம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2025.

The post பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை :ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article