பாரதிக்கு வயது 143 மகாகவி பாரதியின் பன்முகத் தன்மை

3 months ago 17
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற எண்ணற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய பாரதியைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காண்போம்.. பாரதி ஒரு ஆன்மீகக் கவியாக பலருக்குத் தெரியலாம். கண்ணன் பாடல்கள் அதற்கு ஒரு காரணம். கண்ணனை குழந்தையாக, தாயாக, சேவகனாக, நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து பாடல்கள் புனைந்தவர் பாரதியார் தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. தமிழ் இலக்கியத்திற்கு புதுக்கவிதை, சிறுகதை என நவீன வடிவம் கொடுத்தவரும் பாரதிதான்....சங்க கால புலவர்கள் பிடியில் இருந்த தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிவுடையவராக பாரதி திகழ்ந்தார்.. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான். 38 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதியின் வரிகள், அவர் மறைந்து நூறாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றும் உயிப்போடு இருப்பதுதான் தனிச்சிறப்பு....
Read Entire Article