சென்னை: பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா திருவிடந்தை நித்தியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பி்ல் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.