வாழப்பாடி: பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து காலை 8 மணிக்கு நீர் திறக்கப்படுகிறது. பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறு, வசிஷ்டநதியோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் 24 நாட்களுக்கு 61.25 மி. கன அடிக்கு மிகாமலும் நீர் திறக்கப்படவுள்ளது.
The post பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து காலை 8 மணிக்கு நீர்திறப்பு appeared first on Dinakaran.