பாபர் அசாம் தேர்ந்தெடுத்த உலக டி20 அணி... யாருக்கெல்லாம் இடம்..?

5 hours ago 1

கராச்சி,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளார்.

அந்த அணியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்யாமல் கழற்றி விட்டுள்ளார். அத்துடன் தன்னையும் தேர்ந்தெடுக்காத அவர் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோரையும் கழற்றிவிட்டுள்ளார்.

ஆனால் இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா மற்றும் தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பாபர் அசாம் தேர்ந்தெடுத்த உலக டி20 அணி பின்வருமாறு:-

1. ரோகித் சர்மா (இந்தியா)

2. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)

3. பகர் ஜமான் (பாகிஸ்தான்)

4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

5. பட்லர் (இங்கிலாந்து)

6. டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)

7. மார்கோ ஜான்சன் (தென் ஆப்பிரிக்கா)

8. ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

9. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

10. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

11. மார்க் வுட் (இங்கிலாந்து)

Read Entire Article