உசிலம்பட்டி, பிப். 7: உசிலம்பட்டியில் மின்வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், இக்கோட்டத்தில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் களப்பணியாளர்கள் உபகரணங்களை பயன்படுத்தும் வழிமுறைகள், களத்தில் பாதுகாப்புடன் பணியாற்றுவது, விபத்துகள் ஏற்படாத வகையில் செயல்படும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் உதவி மின் பொறியாளர்கள் மற்றும் அனைத்து வகை களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
The post பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மின்சார பணியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.