பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் அப்ரன்டிஸ்

3 months ago 24

i) Graduate Apprentice: (B.E.,/B.Tech) 9 இடங்கள். a. Electronics and Communication: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
b. Mechanical: 3 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.டெக்.,
c. Computer Science: 3 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பாடத்தில் பி.டெக்.,பயிற்சியின் போது உதவித் தொகை ரூ.9,000 வழங்கப்படும்.

ii) Technical Apprentice: (Diploma) 46 இடங்கள்.

a. Cinematography: 2 இடங்கள். தகுதி: சினிமாட்டோகிராபியில் டிப்ளமோ.
b. Civil: 5 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ
c. Electrical: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ
d. Computer Science: 10 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.
e. Electronics and Communication: 15 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.
f. Mechanical: 11 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.டிப்ளமோ/பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.பயிற்சியின் போது உதவித் தொகையாக ₹8,000 வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட அப்ரன்டிஸ் பயிற்சியில் சேர தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரன்டிஸ் பயிற்சிக்கு வழங்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து DRDO நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2024.

The post பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article