'பாட்டல் ராதா' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

2 months ago 14

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Await the craziness and chaos that's about to explode #BottleRadha Release Date announcement tomorrow at 5️⃣ PM ✨A film by @DhinakaranyojiA @RSeanRoldan MusicalProduced by @beemji #NeelamProductions @balloonpicturez #ArunBalaji@gurusoms @sanchana_n @actorjohnvijaypic.twitter.com/yGeS0s4N1E

— Neelam Productions (@officialneelam) October 29, 2024
Read Entire Article