பாடியநல்லூர், நல்லூர் ஊராட்சி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார்

3 months ago 22

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனத்தை நேரில் சந்தித்து, தடையில்லா மின்சார வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ, செங்குன்றம் மின்சார வாரியத்தின் சார்பில் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

பின்னர் பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர் கம்பர் தெரு, நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் அண்ணா தெரு, ஆட்டம் தாங்கள் பெருமாள் கோயில் தெரு ஆகிய 3 இடங்களில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், சோழவரம் ஒன்றியக்குழு துணை தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கினார். ஆவடி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சவுந்தரராஜன், செங்குன்றம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், பாடியநல்லூர் மின்வாரிய உதவி பொறியாளர் கருணாநிதி, நல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தவள்ளி டில்லி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சென்னை வடகிழக்கு திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு, 3 இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த புதிய டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார்.

The post பாடியநல்லூர், நல்லூர் ஊராட்சி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article