“பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம்” - கனிமொழி சாடல்

3 weeks ago 7

சென்னை: “பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மவுனமாக அமர்ந்து, பாஜக - அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்தக் கூட்டணி அமைந்து இருக்கிறது,” என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article