பாஜக கூட்டணி அரசு விரைவில் வீழ்ந்து விடும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

5 months ago 35

திருப்பூர்,

திருப்பூரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக்கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. மிகப்பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். காஷ்மீரில் வேட்பாளர்களே கிடைக்காத பாஜகவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்குமே தவிர அவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது.

தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி. மூலமாக ஆயிரம் ஆயிரம் கோடிகளை பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு வெள்ளம் வந்தபோதும், மழை பெய்தபோதும், நிவாரணத் தொகைகளை அளிக்காமல் நம்மை வாட்டுகின்றனர். வரியாக கொடுத்த பணத்தை நிவாரணமாக கேட்டால் அவர்கள் வீட்டு பணத்தை கேட்பதுபோல திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்கள்.

இதனால் மத்திய அரசுக்கு மனித தன்மை இருக்கிறதா என கேட்க தோன்றுகின்றது. 100 நாட்களைத் தாண்டிய பாஜக கூட்டணி அரசு 150 நாட்களை தாண்ட முடியாது. விரைவில் அவர்கள் வீழ்ந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article