“பாஜக எதிர்ப்பில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இல்லை” - திருமாவளவன் விரிவான விமர்சனம்

4 months ago 16

திருவண்ணாமலை: “பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், பல்வேறு ஊகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில், அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

Read Entire Article