மதுரை: பாஜகவினர், கனிமவளக் கொள்ளையர் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது, என மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியது முற்போக்காளர் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது. குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை திராவிட மாடலாக மாற்றியவர் அவர். மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகம் எழுதியவர். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் போராடியவர். ஆவினில் ஊழலை ஒழித்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியிலும், விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தவர். அவர் செய்த தவறு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.