வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. 'வக்பு வாரியச் சட்டம்' என்பது, இஸ்லாமியர்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது.